முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவரான பேரறிவாளன், இன்று(மே 18) உச்சநீதிமன்றத்தால் அரசியல் அமைப்பு சாசனம் 142-இன் கீழ் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலையான நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Perarivalan release: ’வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்குணமும்’ - கமல்ஹாசன் - perarivalan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன் இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Perarivalan release: ’வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்குணமும்’ - கமல்ஹாசன்
இந்நிலையில், திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Perarivalan Release: ’ஓரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜீ.வி.பிரகாஷ்குமார்