பெண்களின் சிறப்பு, மாண்பைப் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை் உலகிற்கு உணர்த்திடும் வகையிலும், ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகள் வழங்குக - கமல்ஹாசன் - மகளிர் தினவாழ்த்துகள் கூறிய கமல்ஹாசன்
பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகளும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி சாத்தியப்படும் என மகளிர் தின வாழ்த்துகளை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
KamalHaasan
இதனிடையே, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகளும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்றுக் கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும். தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.