தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் - பொங்கிய கமல் - அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: கரோனா தடுப்பூசி இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

By

Published : Oct 23, 2020, 8:35 PM IST

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் பாட்னாவில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தால் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.

இதனை அடுத்து புதுக்கோட்டையில் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன் அரசு செலவில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனச் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.

மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details