தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்கள் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் - கமல் ஹாசன் ட்வீட்

பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

By

Published : Apr 20, 2020, 9:25 PM IST

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 43 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 6 ஆயிரத்து 109 பேருக்கு இன்று கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 41 ஆயிரத்து 710 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், 46 பேர் இன்று குணமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் 457 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.

Kamalhaasan's Tweet

அதில், ”கொல்லும் கரோனாகூட சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில்கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள் தான், இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்க! - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details