சென்னை: அரசியல் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும் என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், காணொலி ஒன்றையும் இணைத்துள்ளார்.
அந்தக் காணொலியில், இந்திய அரசியல் காந்தி, நேரு, அம்பேத்கரை நமக்குத் தந்துள்ளது. அதுபோல, தற்போதுள்ள சூழலில் தலைவர்கள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது; சாத்தியமும் உள்ளது என்றும், சல்லிக்கட்டு தடை நீக்கத்திற்காகத் தமிழ்நாடு மாணவர்கள் நடத்திய போராட்டம் மொத்த இந்தியாவையும் கவனிக்கச் செய்தது என்றும் அவர் கூறியுள்ளார்.