தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் - கமல் ஹாசன் - kamalhaasan slams tn govt thoothukudi gun shoot

தூத்துக்குடி: மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாசன் ட்வீட்
கமல் ஹாசன் ட்வீட்

By

Published : May 22, 2020, 12:25 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 1000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கமல் ஹாசன் ட்வீட்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம்: பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 1,000 போலீசார்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details