தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் - கமல்ஹாசனின் உடல்நிலை

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Kamalhaasan
Kamalhaasan

By

Published : Nov 24, 2021, 6:00 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் ரஜினியும் கமலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று (நவம்பர் 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதனிடையே கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் ஷ்ருதிஹாசன் , விஜய் சேதுபதி, சிம்பு மூன்று பேரில் யாரேனும் ஒருவர் தொகுத்து வழங்கலாம் என சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details