தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இர்ஃபான் கான் மறைவுக்கு கமல் - தனுஷ் இரங்கல் - கமல்ஹாசன் ட்வீட்

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மறைவுக்கு நடிகர்கள் கமல் ஹாசன், தனுஷ் ஆகியோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

kamal
kamal

By

Published : Apr 29, 2020, 4:53 PM IST

நடிகர் இர்ஃபான் கான் பாலிவுட் திரைப்படங்களில் 1988ஆம் ஆண்டு முதல் நடித்து வந்தார். இவர் 'சலாம் பாம்பே', 'மக்பூல்', 'பான் சிங் தோமர்', 'தி லஞ்ச் பாக்ஸ்', உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பாலிவுட் மட்டுமல்லாது 'ஸ்லெம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை', 'ஜூராஸிக் வேர்ல்டு', 'அமேசிங் ஸ்பைடர் மேன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் இர்ஃபான் நடித்திருந்தார். 2011ஆம் ஆண்டு 'பான் சிங் தோமர்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

2018ஆம் ஆண்டு இர்ஃபான் கான், புற்று நோய்க்காக லண்டனில் சிகிச்சைப் பெற்று வந்தார். சமீபத்தில் இவரின் தாயார் வயது மூப்புக்காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு உடல் நலக்குறைவால் இர்ஃபான் கான் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த, இர்ஃபான் கான் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மரணத்திற்குப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இர்ஃபான்ஜி உங்களது பணி எப்போதும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தும். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என நான் விரும்பினேன். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ தகுதியானவரும் கூட. இந்த நேரத்தில் இர்ஃபானின் குடும்பம் மனவலிமையுடன் இருக்க வேண்டும்' என்று ட்வீட் செய்திருந்தார்.

அதே போல் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இர்ஃபான் கானின் இறப்புசெய்தி கேட்டு என் மனம் உடைந்தது. அவர் திறமையான கலைஞர். நல்ல மனிதரை இழந்து விட்டோம். எப்பொழுதும் அவரது கனிவான வார்த்தைகளை மறக்கமாட்டேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்' என்று ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details