தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் தொடங்கியது. மக்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க தொடங்கியிருக்கின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாக்களித்தார் - சட்டப்பேரவைத் தேர்தல்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சென்னையில் வாக்களித்தார்.
ட்ச்ஃப
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர் நிலை பள்ளியில் தனது மகள்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தினார். அதேபோல், அவரது மகள்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
முன்னதாக காலை ஏழு மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 7.30 மணிக்கு தாமதமாக தொடங்கியது
Last Updated : Apr 6, 2021, 9:37 AM IST