தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”பண்புள்ள அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங்” - கமல் ட்விட் - ஜஸ்வந்த் சிங் காலமானார்

பண்புள்ள அரசியல்வாதியாகவும், இந்திய அரசியலுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kamal tweet Jaswant Singh
kamal tweet Jaswant Singh

By

Published : Sep 27, 2020, 8:12 PM IST

பல முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜக கட்சியை நிறுவிய தலைவர்களுள் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் (64) காலமானார். இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”இந்திய இராணுவத்தின் அதிகாரியான ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை, நிதித் துறை அமைச்சராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர்.

இவர் ஒரு பண்புள்ள அரசியல்வாதியாகவும், இந்திய அரசியலுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

குணமடைந்ததும் எங்களுக்காக ஒரு பாடல் பாட வேண்டும் - எஸ்பிபியின் மருத்துவமனை நாட்கள் பற்றி விவரிக்கும் சிறப்பு மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details