தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை’ - கமல்ஹாசன் ட்வீட் - கமல்

உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal tweet
kamal tweet

By

Published : Oct 4, 2021, 7:41 PM IST

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர், பன்வீர்பூர் கிராமத்தில் நேற்று (அக்.3) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

kamal tweet

இதனையடுத்து உத்தரப்பிரதேச விவசாயிகள் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில், 'உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details