சென்னை: பொது முடக்க தளர்வுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நமைக் காத்திடும் நாமே தீர்வு - கமல் ட்வீட் - kamal haasan
தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது.
கரோனா சூழல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தில் தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்தது. ஆலயங்கள் உள்பட பல பொது மக்கள் கூடும் இடங்களை திறக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் நெரிசல் அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு என குறிப்பிட்டுள்ளார்.