இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலை, ஐ.ஐ.எஃப்.எல். வெல்த் ஹுரூன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுவருகிறது. இந்த அமைப்பால் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.
இந்த அமைப்பு தற்போது வெளியிட்ட தகவலின்படி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட அதிகரித்திருப்பதாகத் கூறப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு ரூ.1,002 கோடி வருமானம்
அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, இந்த ஆண்டும் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரூ.5.6 லட்சம் கோடி கௌதம் அதானி இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். இருப்பினும் இரண்டாவது இடத்தில் உள்ள கௌதம் அதானி, அவரது குழுமத்தின் வளர்ச்சி கடந்த ஆண்டைக் காட்டிலும் 261 விழுக்காடு அதிகரித்துள்ளது.