தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்- கமல்ஹாசன் - chennai

சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

"காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்" - கமல்ஹாசன்

By

Published : Aug 6, 2019, 5:15 AM IST

சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற சமூகசேவகர் கைலாஷ் சத்தியார்த்தி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ' ப்ரைஸ் ஆஃப் ப்ரீ ' (Price of free) என்ற ஆவணப்படத்தை மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், வி.ஜி.சந்தோசம், அமுதா ஐ.ஏ.எஸ்., கிருத்திகா உதயநிதி, டாக்டர் மனோரமா, ரெஜினா ஜேப்பியார் ஆகியோரின் முன்பு திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு தன்னிடம் முழு பலம் இருக்கும் தைரியத்தில் நாடாளுமன்றத்தில் கலந்து பேசாமல் முடிவெடுத்ததில் இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்.

மேலும் வேலூர் தேர்தலில் 62விழுக்காடு வாக்குப்பதிவே நடந்திருக்கிறது, 38விழுக்காடு மக்கள் வாக்களிக்காதது தேர்தலுக்கான விமர்சனமாக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் வருமா என்ற பயமும் எனக்குள் இருக்கிறது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details