மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "நேற்று ரஜினி சந்திப்பில் அரசியல் பேசவில்லை. நலம் விசாரிக்க மட்டுமே சென்றிருந்தேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டாரே பிறகு அழைப்பது ஒரு நண்பனுக்கு அழகில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்யமாட்டேன் என்று கூறியது யாரையும் குறிப்பிட்டு அல்ல என்னுடைய முதிர்ச்சியை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.
திமுகவிலிருந்து தூதர்கள் மூலம் கூட்டணிக்கு அழைப்பு வந்தது. ஆனால் தூதர்களிடம் எல்லாம் நாங்கள் பேசுவதில்லை, தலைமை நேரடியாக அழைப்பு விடுத்திருந்தால் பேசி இருப்போம். கரோனா காலம் என்பதால் மற்ற தலைவர்களை மாநாட்டுக்கு அழைப்பது கடினம்.