தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை - கமல்ஹாசனின் வலது காலில் முறிவு

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

kamal-hassan

By

Published : Nov 21, 2019, 3:05 PM IST

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

கமல்ஹாசன்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி வரும் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல்ஹாசன் நம்மை சந்திப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...

உலக நாயகனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

ABOUT THE AUTHOR

...view details