'கமல் 60' பாராட்டு விழா முடிந்த நிலையில் ஒடிசா சென்ற கமல்ஹாசன், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் நேரில் சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் முதன்மையான திறன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசனுக்கு நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
நட்பு முக்கியமில்ல தமிழ்நாட்டு நலன்தான் முக்கியம் - கமல்ஹாசன் - Kamal hassan
எங்கள் நட்பை தவிர தமிழகத்தின் நலனே முக்கியம், கமலுடன் இணைந்து பயணிப்பேன் என்று கூறிய ரஜினியின் கருத்துக்கு கமல் பதிலளித்துள்ளார்.
kamal
இதனையடுத்து சென்னையில் பத்திரிக்கையாளர்களை கமல் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கமலுடன் சேர்ந்து பயணிப்பேன் என்று ரஜினி சொன்னதுக்கு உங்களது கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு கமல், நாங்கள் தேவைப்பட்டால்தான் இணைவோம். எங்கள் நட்பை தவிர தமிழகத்தின் நலன் என்பதுதான் இதில் முக்கியமான ஒன்று என தெரிவித்தார்.