உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி: கமல் அறிவிப்பு - ரூ. 1 கோடி நிதி
17:24 February 20
15:56 February 20
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி
சென்னை: படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து உயிரிழந்தோர், காயமுற்றோர் ஆகியோரின் குடும்பத்திற்கு நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.