தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராக பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நீதிக்காக போராடிய மேஜிஸ்திரேட், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர்! - கமல்ஹாசன் வாழ்த்து! - kamalhassan twitter
சென்னை : சாத்தான்குளம் வழக்கில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், காவலர் ரேவதிக்கும் வாழ்த்து தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
kamal
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.