இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 89ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இளைஞர்களின் எழுச்சி நாயகனாக நினைவுகூரப்படும் அப்துல் கலாம், இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகியவற்றில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். இவர் இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும்.
ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அனுபவமே பாடம் - ரஜினிகாந்த் ட்வீட்