தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எந்த முன்னேற்றமும் இருக்காது, மாணவர்களுக்கு மன அழுத்தம்தான் வரும்’ - அரசு மீது கமல் தாக்கு!

சென்னை: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதால் மாணவர்களின் கல்வியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamal

By

Published : Sep 18, 2019, 7:57 PM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், புதிய கல்வித்திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகரிக்காது, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயமும், மன அழுத்தமுமே அதிகரிக்கும் என்றும், ஜாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகள்தான் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமல் ஹாசன்

அதேபோல், மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராத 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள கமல், இதற்குப் பதிலாக பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details