தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சுயமரியாதையுடன் வாக்களியுங்கள்' - கமல்ஹாசன் - சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அனைவரும் சுயமரியாதையுடன் வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'சுயமரியாதையுடன் வாக்களியுங்கள்'
'சுயமரியாதையுடன் வாக்களியுங்கள்'

By

Published : Oct 1, 2021, 10:04 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 'உள்ளாட்சி உரிமைக் குரல்' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று (செப்.30) செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "உண்மையான மக்கள் சக்தி உள்ளாட்சித் தேர்தலாகத்தான் இருக்க முடியும். இதனைக் கிராமசபைக் கூட்டங்கள் மூலம் நாங்கள் பரப்பிக் கொண்டு இருக்கின்றோம். மக்கள் கைகளுக்கு அதிகாரம் வர ஆரம்ப அடித்தளம்தான் இது.

மறதி இருப்பதால்தான் மீண்டும், மீண்டும் ஆண்ட கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. பொழிச்சலூர் ஊராட்சியில் உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி இன்னும் கட்டப்படவில்லை.

நமக்கு இன்னும் சுய மரியாதைகள் வரவேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அனைவரும் சுயமரியாதையுடன் வாக்களியுங்கள்" என்றார்.

இதையும் படிங்க:இயல்பைவிட இந்தாண்டு பருவமழை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details