மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2021 சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த கமல்ஹாசன் தலைமையில் சென்னை - தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. மூன்று நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சிதம்பரம் உள்ளிட்ட 36 தொகுதி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று (நவம்பர் 2) 4 மணிக்கு மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 தொகுதி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.