மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி. ராய் பிறந்த நாளான நேற்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மருத்துவர் தினம்: நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து! - மக்கள் நீதி மையம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் மருத்துவர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
Kamal Haasan congratulates doctor on Twitter
இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில், தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவரது பதிவில், "பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல் தாம் நம் நம்பிக்கையின் ஊற்று.
அந்தப் பட்டியலை நீள்விக்க, என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும்" என்று தெரிவித்துள்ளார்.