கரோனா தொற்று அச்சம் கரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் உதவி செய்து வருகின்றனர்.
இந்த உதவிகளை தடை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும் ஊரடங்கு அமலில் இருக்கு தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.