கோவிட்- 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற இருந்த பொதுத் தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பின்னர், தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தியது. இதனால் மாணவர்கள் படிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கல்வித் தொலைக்காட்சியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களை வீடியோவுடன் கற்பித்து வருகிறது.