தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்! - TN Government

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்: எஸ்.பி., மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றம்!
கள்ளக்குறிச்சி கலவரம்: எஸ்.பி., மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றம்!

By

Published : Jul 19, 2022, 4:57 PM IST

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக கடந்த ஜூலை 17 அன்று தனியார் பள்ளி முன்பு கூடிய போராட்டக்காரர்கள், பள்ளி வாகனம் மற்றும் உடைமைகளை கடுமையாக சேதப்படுத்தினர்.

இதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில் வளர்ச்சி தட திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஸ்வரன் குமார் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவனை , கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக நியமனம் செய்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவியின் மறுபிரேத பரிசோதனைக்கு பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details