தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு நிறைவு.. 1 மாதத்தில் இறுதி அறிக்கை.. - கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளதால், 1 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு

By

Published : Feb 1, 2023, 7:45 PM IST

Updated : Feb 1, 2023, 8:08 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மரணமடைந்த நிலையில், அதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை முறையாக விசாரணை செய்யக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் ஜனவரி 20ஆம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் ஜிப்மர் மருத்துவ குழு நடத்திய பிரேத பரிசோதனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறினார்.

இதனையடுத்து விசாரணையின் தற்போதைய நிலை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார். மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், மற்ற விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார். இதனையடுத்து, ஜிப்மர் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம்

Last Updated : Feb 1, 2023, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details