தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.எம். கிருஷ்ணா புத்தக வெளியீட்டு விழா: இடம் தர கலாஷேத்ரா அனுமதி மறுப்பு

சென்னை : எழுத்தாளர் டி.எம். கிருஷ்ணாவுக்கு புத்தகம் வெளியீட்டு விழா நடத்த இடம் தர கலாஷேத்ரா அனுமதி மறுத்துள்ளது.

TM krishna, டிஎம் கிருஷ்ணா
TM krishna

By

Published : Jan 30, 2020, 7:52 PM IST

பாடகரும், எழுத்தாளருமான டி.எம். கிருஷ்ணா ‘செபாஸ்டின் அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் மிருதங்கம் செய்வோர் பற்றி வரலாற்று ஒன்றை புத்தகம் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா கிண்டியில் அமைந்துள்ள ருக்மினி அரங்கத்தில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்தப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அங்கு புத்தக வெளியீட்டு விழா நடத்த வழங்கிய அனுமதியைத் திரும்பப்பெறுவதாக காலாஷேத்ரா அறிவித்துள்ளது.

இது குறித்து காலாஷேத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "'காலாஷேத்ரா' மத்திய கலாசாரத் துறையினரின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது அரசு அமைப்பு என்பதால் அரசியல், கலாசார, சமூக நலனுக்கு கேடு விளைவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

ருக்மினி அரங்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள புத்தகம் குறித்து செய்தித்தாளில் இன்று வெளியான விமர்சனக் கட்டுரையில் அப்புத்தகத்தின் சில பதிவுகள் இடம்பெற்றிருந்தன. அவை சர்ச்சைக்குரிய பதிவுகளாகத் தெரிகிறது. எனவே, மேல்குறிப்பிட்ட அரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா நடத்த நாங்கள் வழங்கிய அனுமதியைத் திரும்பப்பெறுகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கலையுலக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புத்தக வெளியீட்டு விழா தரமணியில் அமைந்துள்ள 'ஏஷியன் காலேஷ் அஃப் ஜெர்னலிசம்' கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் என டி.எம். கிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பாஜக எம்.பி.யை கைது செய்ய வேண்டும்: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details