தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம்: பேராசிரியர் ஹரி பத்மனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்! - பேராசிரியர் ஹரி பத்மன்

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 3, 2023, 6:34 PM IST

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை ருக்மணி தேவி கலைக்கல்லூரியில், மாணவிகளுக்கு அங்கு பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியின் முன்னாள் இயக்குநர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அறிந்த தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமரி, கல்லூரிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் மாணவிகள் கொடுத்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ் குமரி உறுதி அளித்தார்.

இந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருவான்மியூரில் காவல் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சஞ்சய் கிருஷ்ணன், சஞ்ஜித்லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் வெளியூர் சென்று சென்னை திரும்பிய பேராசிரியர் ஹரி பத்மனை காவல் துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் புகார் கூறியவர்கள், அனைவருடனும் சகஜமாக மட்டுமே பழகியதாகவும், பாலியல் புகார் கூறிய பெண் தனது முன்னாள் மாணவி தான் என்றும், அவருக்கு வேறு பிரச்னை காரணமாக கல்வி நிலையத்தை விட்டு வெளியேறினார் என்றும்; அவர் கூறும் குற்றச்சாட்டு உணமையல்ல எனவும் பேராசிரியர் ஹரி பத்மன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கல்லூரி நிர்வாகம் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சஞ்சய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோரை கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்த நிலையில் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கு; போராட்டம் விரிவடையும் என மாதர் சங்கம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details