வட சென்னை மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி நான்கு லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றார் கலாநிதி வீராசாமி - DMK
சென்னை: வட சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ், வட சென்னை மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவருக்கு வழங்கினர்.
அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, "எனக்கு வாக்களித்ததற்காகவும், தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வடசென்னை தொகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான பணிகளை திமுக தலைவர் அறிவுரையின்படி மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்பின்படி நிறைவேற்றுவேன்" என தெரிவித்தார்.