சென்னை:கோலிவுட் சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சமீபத்திய படங்கள் சற்று சறுக்கியது. இதனால் வழக்கம்போல் ரஜினி அவ்வளவு தான் என பேச்சு எழுந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் நடிகர் ரஜினி.இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் வசந்த்ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தமிழகம் மட்டிம் மல்லாது பிற மாநிலங்களிலும் படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் பட்டையை கிளப்பிய இப்படம் ரஜினிகாந்த் படங்களிலேயே மிகப் பெரிய வசூல் அள்ளிய படமாக அமைந்தது. இப்போது வரை ரூ.650 கோடியை கடந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரஜினியின் ஸ்டைல்,அனிருத் இசை,கேமியோ ரோல் பண்ணிய சிவராஜ் குமார்,மோகன் லால் இருவரின் திரை ஆளுமை ஆகியவை படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. குறிப்பாக நெல்சனின் திரைக்கதை படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.பீஸ்ட் படத்தால் துவண்டு இருந்த நெல்சனுக்கு மிகப் பெரிய மன நிம்மதியை ஜெயிலர் கொடுத்துள்ளது.
இதனால் ரஜினியும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் விக்ரம் படத்தின் வசூலையும் ஜெயிலர் முறியடித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ரெக்கார்ட் மேக்கர் நான்தான் என்பதை ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்துக்கு படத்தின் வெற்றியில் இருந்து குறிப்பிட்ட பகுதி பங்குத்தொகைக்கான காசோலையை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலாநிதி மாறன் கொடுத்துள்ளார்.கிட்டத்தட்ட ரூ.100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் மற்றொரு பரிசாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் கலாநிதி மாறன் ரஜினிகாந்துக்கு பரிசாக வழங்கியுள்ளார்.இதன் மதிப்பு கிட்டத்தட்ட 1.5 கோடி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சன்பிச்சர்ஸ் நிறுவனம் தனது x தளத்தில் வெளீயிட்டு இருக்கும் பதிவில் ”ஜெயிலர் சக்சஸ் கொண்டாட்டம் தொடர்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல்வேறு கார் மாடல்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், BMW X7 காரை தேர்வு செய்தார். கலாநிதி மாறன், ரஜினிகாந்த் தேர்வு செய்த காரின் சாவியை அவரிடம் வழங்கினார் “ என குறிப்பிடப்பட்டு இதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில்உள்ளனர்.இதனையடுத்து படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதையும் படிங்க:ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் 'டியர்’ பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!