தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞரின் பிறந்தநாள்: அரசின் பல்வேறு புதிய அறிவிப்புகள்

கலைஞரின் பிறந்தநாள்: அரசின் பல்வேறு புதிய அறிவிப்புகள்
கலைஞரின் பிறந்தநாள்: அரசின் பல்வேறு புதிய அறிவிப்புகள்

By

Published : Jun 3, 2021, 1:21 PM IST

Updated : Jun 3, 2021, 3:28 PM IST

13:10 June 03

 கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:

  • தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை:சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், ரூ.250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.
  • சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில்  கலைஞர் நினைவு நூலகம்:சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவின் அதிநவீன மிகப்பெரிய நூலகம் 2010ஆம் ஆண்டு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்கள்.  அதுபோல், தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும் இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்
  • இலக்கிய மாமணி விருது தொடக்கம்:கலைமாமணி விருது போல், இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்றுபேருக்கு ஆண்டுதோறும் பாராட்டுப்பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
  • கனவு இல்லம்:தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுபோன்ற புகழ்பெற்ற விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில்,அவர்கள் வசிக்கும் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
  • திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில்  நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர் களங்கள்:திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரால் இனங்கண்டு, ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில், 16000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

தானியம், பயிறு வகைகளை சரியான வகையில் உலரவைக்க சூரியஒளியில் உலர்விக்கும் களங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 50 களங்களும், ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில்  2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும்,  என மொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், மேற்கூறியவாறு, 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

  • திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை:மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர்ப்புற அரசுப்பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Last Updated : Jun 3, 2021, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details