தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இயக்குநர் சசிகுமாரின் பாராட்டு மிகப்பெரிய அங்கீகாரம்' - இ.வி. கணேஷ்பாபு

சென்னை: 'கவசம் இது முகக்கவசம்' என்னும் கரோனா விழிப்புணர்வு பாடலுக்காக இயக்குநர் சசிகுமாரிடம் பாராட்டுப் பெற்றதை மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுவதாக இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு கூறியுள்ளார்.

கணேஷ் பாபு
கணேஷ் பாபு

By

Published : Jun 21, 2020, 2:42 AM IST

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழ்நாடு அரசு பல விளம்பரப் படங்களை உருவாக்கி ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.


அந்த வகையில் தற்போது ‘கட்டில்’ பட இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு இயக்கிய பாடல் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. இதுகுறித்து விக்னேஷ் பாபு கூறுகையில், ”கவசம் இது முகக்கவசம் என்ற பாடலை நான் எழுதி, இயக்கியது இப்போது பல முன்னணி தொலைக்காட்சிகளின் வாயிலாக கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.

இந்தப் பாடலில் இயக்குநர் சசிகுமார், தேவயானி, ஆரி, ஸ்ரீகாந்த் தேவா, ’சதுரங்கவேட்டை’ நட்ராஜ் (நட்டி), ’ஆடுகளம்’ ஜெயபாலன் ரமேஷ்கண்ணா, ரவிமரியா, வையாபுரி ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். நான் எழுதிய இந்தப் பாடல் வரிகளைப் பற்றி இயக்குநர் சசிகுமார் கூறும்போது, ”பாடலில் எளிமையான வரிகள் தான் மக்களைச் சென்றடையும். அந்த வகையில் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் வரிகள் அமைந்திருக்கின்றன” என்று பாராட்டினார். இதனை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

தர்மதுரை படத்தில் ’ஆண்டிபட்டி கணவா காத்து’ பாடலின் மூலம் பாடகராகப் பிரபலமடைந்த செந்தில்தாஸ் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். 'மெட்டிஒலி' சாந்தி நடனம் அமைக்க செந்தில்தாஸ், மாலதி லட்சுமணன், முகேஷ் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details