தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடங்கள் - நோட்டீஸ் அனுப்ப உத்தரவு - ககன்தீப் சிங் பேடி உத்தரவு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடங்களை கட்டுமான நிலையிலேயே தடை செய்ய நோட்டீஸ் வழங்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

கட்டட  திட்ட அனுமதிக்கு  மாறாக கட்டப்படும் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையர் உத்தரவு
கட்டட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையர் உத்தரவு

By

Published : Apr 22, 2022, 1:05 PM IST

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் கட்டட திட்ட அனுமதிக்கு மாறக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமால் கட்டப்படும் கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்த்ப்பட்ட வார்டின் உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்களுக்கு கள ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு நகரமைப்பு திட்ட சட்டம் 1971 (Tamil Nadu Town and Country Planning Act 1971) நடவடிக்கை எடுக்க என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், "தங்கள் பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணி இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் சென்று உயர்நீதிமன்ற உத்தரவின்படி நுழைவுவாயிற் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திட்ட அனுமதியின்படி கட்டப்பட்டுள்ளதா என கட்டுமான நிலையிலேயே கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

கட்டட திட்ட அனுமதி உள்ளதா எனவும், திட்ட அனுமதிப்படி கட்டுமானம் நடைபெறுகிறதா என்பதையும் பார்வையிட்டு திட்ட அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டப்படுவதை அலுவலர்கள் 100% உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் கள ஆய்வின்போது கட்டட திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமான பணியை கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டிஸ் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:குழந்தை திருமணம் விழிப்புணர்வு நடவடிக்கை - மகளிர் உரிமைத் துறை!

ABOUT THE AUTHOR

...view details