தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜி.பி.முத்து மீது புகார் கொடுத்த நடிகர் சுகுமார் - பின்னணி தெரியுமா? - etv bharat

கொலை மிரட்டல் விடுத்து வரும் யூ - ட்யூபர் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதல் படப்புகழ் நடிகர் சுகுமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது புகார்
ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது புகார்

By

Published : Aug 5, 2021, 8:34 PM IST

சென்னை: காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர், காதல் சுகுமார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆக.5) புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதல் சுகுமார், "கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாகப் பள்ளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தாத வகையில் சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் ஆபாசங்கள் நிறைந்த வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜி.பி.முத்து உள்ளிட்டோர் மீது புகார்

இதனை தடுத்து நிறுத்த வேண்டி சமீபத்தில் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானும் ஊடகங்கள் வாயிலாக கருத்துத் தெரிவித்தேன்.

சேலம் மணி, நெல்லை சங்கர் வீடியோ

ஊடகங்களில் நான் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜி.பி. முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோ வெளியிட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

எனவே அவர்கள் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசங்கள் நிறைந்த அவர்களின் சமூக வலைதளப் பக்கத்தை தடை செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு அபகரிப்பு-விசிக பிரமுகர் உள்பட மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details