தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆர் சேவை மையத்தை தொடங்கிவைக்க மலேசியா செல்லும் கடம்பூர் ராஜு! - எம்ஜிஆர் சேவை மையத்தை தொடங்கிவைக்க மலேசியா செல்லும் கடம்பூர் ராஜூ

கோலாலம்பூர் பகுதியில் எம்ஜிஆர் சேவை மையம் தொடங்கிவைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடம்பூர் ராஜு நாளை மலேசியா செல்கிறார்.

மலேசியா செல்லும் கடம்பூர் ராஜூ

By

Published : Nov 8, 2019, 3:23 PM IST

எம்ஜிஆர் பற்றி மலேசியா மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கோலாலம்பூர் பகுதியில் எம்ஜிஆர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை திறந்தவைப்பதற்காக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நாளை மலேசியா செல்கிறார்.

நாளை காலை திருச்சியிலிருந்து காலை 9 மணிக்கு மலேசிய விமானத்தில் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மில்லியனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். எம்ஜிஆர் சேவை மையத்தை மாலை 6 மணிக்கு திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி மலேசிய தமிழ் சங்க பிரதிநிதி மணிவாசகம் இல்ல திருமண விழா, தேசிய பிரஸ் கிளப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க : தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ!

ABOUT THE AUTHOR

...view details