சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர், “உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தொற்றுத் தாக்குதலிலிருந்து மீள கபசுரக் கசாயம் குடிப்பது தீர்வு ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை உள்ளது. நானும் தினமும் காலை அதனைக் குடித்து வருகிறேன்” எனக் கூறினார்.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் வல்லமை கபசுரக் கசாயத்திற்கு உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார் - kabasura kudineer
சென்னை: கரோனாவைக் கட்டுப்படுத்தும் வல்லமை கபசுரக் கசாயத்திற்கு உள்ளது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கரோனாவை கட்டுப்படுத்தும் வல்லமை கபசுர கசாயத்திற்கு உள்ளது -அமைச்சர் ஜெயக்குமார்
மேலும், “தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை என்பது நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலங்கள் கோரும் நிதியை மத்திய அரசு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி வழங்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!