சென்னை:ஹேமந்த் இயக்கத்தில் சசி குமார், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள திரைப்படம், காரி. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காரி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில், நடிகர் சசிகுமார் பேசுகையில், 'ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியமான விளையாட்டு. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு நல்ல முயற்சி எடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு நமது கலாசாரம் என்பதை வலியுறுத்தும் விதமாக படம் எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
காரி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் காரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லட்சுமண் பேசுகையில், 'ஜல்லிக்கட்டு சார்ந்து படம் எடுத்திருப்பதால் படத்தை தடை செய்யக்கோரி எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் விதமாக நாங்கள் படம் எடுத்து உள்ளோம். குதிரைப் பந்தயம் என்பது பணக்காரர்களின் விளையாட்டு, ஜல்லிக்கட்டு பாமர மக்களின் விளையாட்டு. அதனால் தான், ஜல்லிக்கட்டை தடை செய்ய நினைக்கிறார்கள்' என்றார்.
இப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், 'காரி திரைப்படத்தில், வரும் மூன்று கதாபாத்திரங்கள், அவர்களின் போராட்டம் அதில் உள்ள தீர்வை ஜல்லிக்கட்டினை மையப்படுத்தி சொல்லியுள்ளேன். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளன. இதில் கதைக்கு என்ன தேவையோ அதனை எடுத்துள்ளோம்.
இயக்குநர் ஹேமந்த் அளித்த சிறப்பு பேட்டி எத்தனை வகையான காளைகள், வீரர்கள் எப்படி தயாராகிறார்கள், எப்படி நடத்தப்படுகிறது என்பதை சொல்லியுள்ளோம். பீட்டா எதிர்ப்பு தெரிவிப்பது மாட்டை நாம் துன்புறுத்துகிறோம் என்பதே. இது அவர்களின் பார்வை. நமது கலாசாரத்தில் உள்ள நியாயம், தர்மம் அவர்களுக்குத் தெரியாது. பார்க்கின்ற பார்வை தான் வித்தியாசம். சொல்லி புரிய வைத்தால், அவர்களும் புரிந்து கொள்வார்கள்” என்றார்.
இதையம் படிங்க: கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண தேதி அறிவிப்பு!