இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை பெய்வதற்காக யாகம் நடத்தச் சொல்லி இந்து அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதம் ஆகும் என்றும், அரசு அலுவலகங்களில் எந்தவித மதவழிபாட்டுச் சின்னங்களும் இடம்பெறக்கூடாது என்ற முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்திருக்கும் ஆட்சியின் லட்சணம் இதுதானா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மழை வேண்டி யாகம்? - அரசின் மீது வீரமணி பாய்ச்சல்! - திராவிடர் கழகம்
சென்னை: மழை வேண்டி தமிழ்நாடு அரசு யாகம் நடத்த உத்தரவிட்டிருப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
veeramani
மேலும், இந்து சமய அறநிலையத்துறை என்பது வரவு, செலவுகளைப் பார்க்க வேண்டிய துறை மட்டுமே தவிர, யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அதன் வேலையல்ல என்றும் கி.வீரமணி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.