தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாழ்த்தப்பட்டவரின் வாயில் மனிதக் கழிவை ஊற்றுவதா? கி.வீரமணி ஆவேசம் - k veeramani

சென்னை: மன்னார்குடியில் நடந்த சாதிவெறி சம்பவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

k veeramani

By

Published : May 9, 2019, 10:24 AM IST

திருவாரூர் மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கொல்லிமலை என்பவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்டவரின் வாயில் மனிதக் கழிவை ஊற்றுவதா? தந்தை பெரியார் மண்ணிலா இப்படி ஒரு காட்டுமிராண்டித்தன கீழ்த்தரக் கொடுமை? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேபோல், தாக்கப்பட்டவர் மீது அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும்கூட, இத்தகைய மனிதாபிமானமற்ற, கீழ்த்தர, அநாகரிக, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டோர் எவராயினும், எந்த சாதியினராயினும், எவ்வளவு செல்வாக்குள்ள நபர்கள் ஆனாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கையெடுக்க தமிழ்நாடு காவல்துறையும் தயங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சாதிவெறி சம்பவங்களில் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், இப்படி ஒரு கொடுமையா? என்று வேதனை தெரிவித்துள்ள கி. வீரமணி, சாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, மத மாச்சரிய ஒழிப்பு - இவைகளை முன்னிறுத்திய தீவிரப் பிரசாரம் மீண்டும் ‘விசுவரூபம்‘ எடுத்தாகவேண்டும். ஜாதி வெறி, சமய வெறிக்கு இடமில்லை என்று காட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details