சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (ஆக 12) சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு மக்கள் நலன் அரசாக உள்ளது. மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவது தான் அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு நிச்சயமாக செய்யும்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே ஸ் அழகிரி முதலமைச்சரின் முயற்சி
பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் வரும். தொழில் வளர்ச்சி வரும். ஏழ்மையை ஒழிப்பதற்கான திட்டங்கள் இருக்கும். ஏழை எளியவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும். வரவேற்கக்கூடிய வரவு செலவு திட்டமாக இருக்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 100 நாள் ஆட்சி சிறப்பாக நடந்து உள்ளது. நல்லவற்றை செய்ய வேண்டும் என முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
வெள்ளை அறிக்கை நாட்டின் நிலைமையை விளக்கி சொல்கிறது. பொருளாதார ரீதியாக தமிழ்நாடு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்து சொல்லி இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அன்றாட அரசு செலவுக்கு கூட கடன் வாங்கி செய்து உள்ளனர்.
பொருளாதாரம்
இவ்வளவு பொருளாதார இடர்பாடுகள் இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் கூறியது பாராட்டத்தக்கது. பொருளாதார நிலையை காட்டி திட்டங்களை குறைப்பதாக கூறவில்லை.
தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய வருமானமே ஒரு லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மத்தியில் சர்வாதிகார அரசாங்கமாக உள்ளது. ஜனநாயகத்தின் மாண்பே நாட்டிலுள்ள பிரச்சினைகளை மக்களவையில் விவாதிக்க கூடியது தான்.
ஜெர்மனி மக்களவையில் ஹிட்லர் பேசிவிட்டால் கைதட்டி கலைந்து செல்ல வேண்டும். இந்திய மக்களவையில் அப்படி அல்ல. எல்லாவற்றையும் பேசவும் விவாதிக்கவும் தான் மக்களவை.
பிரதமர் மோடி தயங்குவது ஏன்?
இஸ்ரேல் உளவு நிறுவனம் செய்து இருக்கிற விசயத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கேட்கிறார்கள். விவாதிப்பை ஏற்று அரசிடம் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
வியூகம் தவறானதா இல்லையா என்பதை பிரதமர், உள்துறை மந்திரி விளக்க வேண்டியது கடமை. பிரதமர் மோடி விவாதிக்க தயங்குவது ஏன். எதிர்க்கட்சிகள் மக்களவையை முடக்கவில்லை. மக்களவையை நடத்தி விவாதிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
ஆனால் அரசு விவாதிக்க மாட்டோன் என்று கூறி மக்களவையை 2 தினங்களுக்கு முன் முடித்து கொண்டது. மக்களவை நிலையற்று போனதற்கு மோடி அரசு தான் காரணம். எதிர்க்கட்சிகள் அல்ல” என்றார்.
இதையும் படிங்க: பெண்கள் சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்