தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது பொருளாதார குற்றம்' - அழகிரி - K S Alagiri talks about raising petrol and diesel prices

சென்னை: "பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியது ஒரு பொருளாதார குற்றம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கே எஸ் அழகிரி பேட்டி
சென்னையில் கே எஸ் அழகிரி பேட்டி

By

Published : Mar 17, 2020, 8:49 AM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"கொரோனா வைரஸ் உலகளாவிய பாதிப்பு. எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வைரஸ் குறித்து தெளிவான அறிக்கையை கொடுத்துள்ளோம் . வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்துதான் வைரஸ் பரவுகிறது. எனவே மார்ச் 31ஆம் தேதி வரை பன்னாட்டு விமான நிலையத்தையும் மூடலாம். இந்தியா முழுவதும் பன்னாட்டு விமான நிலையத்தை மூடி விடுவது சிறந்தது" என தெரிவித்தார்.

சென்னையில் கே எஸ் அழகிரி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியது ஒரு பொருளாதார குற்றம். மோடி அரசு பணமதிப்பு இழப்பை ஏற்படுத்தி எவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்தை பாழ்படுத்தியதோ அதேபோல் இன்று பெட்ரோல், டீசல் விலையை அதிகப்படுத்தி மிகப் பெரிய சிரமத்தை கொடுத்துள்ளது. பொதுவாக டீசலின் விலையை உயர்த்தினால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். பொதுமக்களால் இதை சமாளிக்க முடியாது. மோடியின் இந்த செயல் குதிரையைக் கீழே தள்ளியதும் இல்லாமல் குழி தோண்டிப் புதைத்தது போல் உள்ளது" என விமர்சித்தார்.

இதையும் படிங்க; தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!

ABOUT THE AUTHOR

...view details