தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கே.பாக்யராஜ் நடிப்பில் சஸ்பென்ஸ்  த்ரில்லருடன் உருவாகியுள்ள "மூன்றாம் மனிதன்" போஸ்டர் வெளியீடு! - பாக்யராஜ்

moondram manithan:கே.பாக்கியராஜ் லீட் ரோலில் நடிக்கும் "மூன்றாம் மனிதன்" திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், எஸ் .ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர்.

moondram-manithan-first-look-poster-
மூன்றாம் மனிதன் போஸ்டர் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 7:17 PM IST

சென்னை:ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். இதில் திரைக்கதை மன்னன், இயக்குனர் கே.பாக்யராஜ், துப்பறியும் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ருத்ரா என்ற படத்தில் புத்திசாலித் தனமாக துப்பறிந்து போலீசுக்கு ஐடியா கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதில் திருடன் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது. ஆனால் மூன்றாம் மனிதன் படத்தில் எந்த சாட்சியும் இல்லாமல் மர்மமாக நடக்கும் ஒரு கொலையை எப்படி துல்லியமாக பலவித டிடெக்டிவ் வேலைகள் செய்து கண்டுபிடிக்கிறார் என்ற சுவராஸ்யமான துப்பறியும் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கே.பாக்யராஜ்.

மேலும் முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா மற்றும் ரிஷிகாந்த், ராம்தேவ், ராஜகோபாலன் மற்றும் மதுரை ஞானம் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே புகழ் மது ஸ்ரீ பாடிய பாடல் முதல் பாடலாக வெளியிடப்படுகிறது.

இப்படத்தில் பாடலுக்கான இசையை வேணு சங்கர், தேவ் ஜி அமைத்து இசை அமைப்பப்பாளர்களாக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் அமைக்கிறார், எடிட்டிங் துர்காஸ் கவனிக்க, கலை இயக்குனராக டி.குணசேகர் பணியாற்றுகிறார்.

இணை தயாரிப்பாளராக டாக்டர்களான எம்.ராஜகோபாலன், டி.சாந்தி ராஜகோபாலன்,பி அழகுராஜா மற்றும் மதுரை சி.ஏ.ஞானோதயா ஆகியோர் இணைகின்றனர். "பழகிய நாட்கள்' என்ற கதையோடு கருத்துள்ள படத்தை இயக்கிய ராம்தேவ், மூன்றாம் மனிதன் படத்தின் கதை, பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் இதில் அலசப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை , தமிழ் திரை இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், எஸ் .ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.

இதையும் படிங்க:சிபிஐ தலைவர் முத்தரசன் நடிக்கும் 'அரிசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details