சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 6) நடைபெற்றது.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
திமுகவினர் ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை இது குறித்து செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து திமுகவினருடன் பேசினோம். அவர்கள் ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை. எங்களது கருத்தைத் தெரிவித்தோம்.
இன்று மாலை திமுகவினர் நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தனர்" என்றார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக - அதிமுக இடையே தொகுதி பங்கீடு உடன்படிக்கை கையெழுத்து!