சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் முதல் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. NDA கூட்டணியில் நிறையக் கட்சிகள் வந்து சென்றுள்ளனர். புதிய பரிமாணத்துடன் பல கட்சிகள் மீண்டும் வந்து இணைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்கும்.
பாஜக தேசிய ஜனநாயக கட்சியை முன்னெடுத்துச் செல்கிறோம். 2024 பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரும். 2024 வெற்றி வேட்பாளர்கள் மற்றும் வாக்கு விழுக்காட்டை இனி பார்ப்பீர்கள். அந்த அந்த கட்சிகள் அவர்களின் வளர்ச்சியை மட்டுமே பார்ப்பார்கள் பாஜக தன்னுடைய வளர்ச்சியை பார்க்கிறது. அதிமுக வெளியேறியதற்கு ஏன் வருத்தப்பட வேண்டும்? ஏன் சந்தோஷம் பட வேண்டும்? பாஜக வலிமை அடைய வேண்டும் என்பதே முதல் நாளிலிருந்து என்னுடைய நோக்கம், 2024 பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். தமிழ்நாட்டில் 39க்கு 39 இடங்களும் நரேந்திர மோடிக்கு வரும்.