தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது திறமையான நடிப்பின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஜோதிகா... மேலும் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இதுவரை எந்த சமூக வளைதளங்களையும் பயன்படுத்தாமல் இருந்த நடிகை ஜோதிகா, தற்போது முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இணைந்த முதல் நாளிலேயே 10,30,000 இணையவாசிகள், இவரை பின்தொடர்கின்றனர்.
மேலும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஜோதிகாவை அவரது கணவரும் நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். அவர் தன்னுடைய கமெண்ட்டில் “என் மனைவி வலிமையானவள். முதல்முறையாக உன்னை இன்ஸ்டாவில் பார்ப்பது த்ரில்லாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும், இன்ஸ்டாகிராம் வந்துள்ள ஜோதிகாவிற்கு வாழ்த்தி தெரிவித்து வருன்றனர்.
முதல் பதிவாக அவர் இமயமலையில் தேசியக் கொடியை ஏந்திய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் அபூர்வமானது என்றும் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்த இந்தப் புகைப்படம் தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித் பட ரீமேக்கில் சிரஞ்சீவி