தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட 36ஆவது வார்டு குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மழை நீர் அந்த பள்ளத்தில் தேங்கி நின்றது.
மழை நீரை அகற்றாமல் காங்கீரிட் அமைக்கும் பணி ; இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் - இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்
மழை நீரை அகற்றாமல் காங்கீரிட் அமைக்கும் பணி நடைபெற்ற விவகாரத்தில் தாம்பரம் மாநகராட்சி, (மணடலம் 3) இளநிலை பொறியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி கமிஷ்னர் உத்தரவிட்டார்.
கவனக்குறைவாக நடந்த வடிகால் பணி
ஆனால் மழை நீரை அகற்றாமல் நேற்று(நவ.08) காங்கீரிட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனுக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'பருவமழை எங்களை ஏமாற்றிவிட்டது...!' - கதறி அழுத விவசாயி