சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பங்களை பெற்று, எழுத்துத்தேர்வு கடந்த 18.9.2021 அன்று நடைபெற்றது.
எழுத்துத்தேர்வின் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் 15.2.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிக்கான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் ஜூலை 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.