தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 27, 2020, 8:56 AM IST

Updated : Jun 27, 2020, 9:10 AM IST

etv-bharat-tamilnadu
etv-bharat-tamilnadu

பெட்ரோல்-டீசல் போட்டா போட்டி: கவலையளிக்கும் சந்தை விலை!

டெல்லி: தலைநகரில் பெட்ரோல் டீசல் விலை கிட்டத்தட்ட ஒரே விலையில் (காசுகள் ஏற்ற-இறக்கம்) ஏற்றம்கண்டுள்ளது. இதனால், சந்தைகளில் காய்கறி, பழங்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன.

அஞ்சாமல் உண்மையைச் சொல்லுங்க - கல்வான் மோதல் குறித்து ராகுல் கேள்வி

டெல்லி: இந்திய எல்லைப் பகுதிக்குள் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதா? அச்சப்படாமல் உண்மையைச் சொல்ல வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி

ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கேள்வியெழுப்பி உள்ளார்.

கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நேரடி உதவி ஆய்வாளருக்கான 2ஆம் கட்ட தேர்வு - திருச்சியில் நடத்திட டிஜிபி உத்தரவு

சென்னை: நேரடி உதவி ஆய்வாளருக்கான உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை திருச்சியில் நடத்திட தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

'பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை?' - பதில் சொல்ல மறுத்த அமைச்சர்!

ஈரோடு: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையனிடம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

டிரைவ்-இன் திரையரங்கமாக மாறிய மைதானம்!

ஸ்பெயினில் கால்பந்து விளையாட்டு மைதானம், டிரைவ்-இன் திரையரங்கமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகோவிச் பயிற்சியாளருக்கு கரோனா!

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின் பயிற்சியாளர் இவானிசெவிக்கிற்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டம்! கடன் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை!

கரோனா நோய்க் கிருமித் தாக்கத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடத்தும் முதல் இயக்குநர் குழுக் கூட்டம் ஜூன் 26ஆம் தேதி நடந்தது.

'வடகொரியாவுடன் நாங்கள் அமைதியைத்தான் எதிர்பார்க்கிறோம்' - தென்கொரிய அதிபர்!

வடகொரியாவுடன் தாங்கள் அமைதியைத்தான் எதிர்பார்க்கிறோம் என தென்கொரிய அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 27, 2020, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details